ஒலி பெருக்கி சாதன அன்பளிப்பு

பாடசாலையின் காலைப் பிராத்தனை உடற்பயிற்சி செயற்பாடுகள் மைதான நிகழ்வுகளை மேற் கொள்வதற்கும் மற்றும் கலைநிகழ்வுகளையும் நடாத்துவதற்கு அமரர் கந்தையா இரத்தினம் (முன்னாள் கல்லுாரி உதவியாளர் 1948-1974) அவர்களின் ஞாபகர்தமாக திரு. இரத்தினம் கதிரமலை நாதன் (கனடா) அவர்களால்  ஒலி பெருக்கி சாதனம் அன்பளிப்பு செய்யப்பட்டது.

Read More

ரெனிஸ் மைதான அமைப்பதற்கான நிதி பங்களிப்பு

2700000 ரூபா பெறுமதியான ரெனிஸ் மைதானம் அமைப்பதற்கு ஆரம்ப கட்டட நிதிப் பங்களிப்பு வழங்கியோர் விபரம். 1) Sivakumar Seevaratnam ---------Rs 300000.00 2) Balachandran Tharmalingam ----Rs 300000.00  

Read More

தேசிய மட்டத்திற்குத் தெரிவான ரெனிஸ் வீராங்கனைகளைக் கௌரவித்தல் நிகழ்வு

        இந்த கௌரவிப்பு நிகழ்வுக்கு முழு அனுசரனை வழங்கிய உரும்பிராய் பாடசாலைகள் பழைய மாணவர்கள் சங்கத்தின்(கனடா) ஊடாக திரு.திருமதி.ஜெ.ஜெயமுகுந்தன் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகள். மேலும் வகுப்பறைத் தொகுதியின் ஒழுக்குகளை சீர்செய்து தந்தமை ,மாநாட்டு மண்டபம் வர்ணப் வேலை செய்து தந்தமை , மேசைகள் திருத்தம் செய்து தந்தமைக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகள். மாநாட்டு மண்டபம் வர்ணப் வேலைக்குப் பின் புதுப்பொலிவுத் தோற்றம்....  

Read More

டெனிஸில் தேசிய மட்டத்தில் தெரிவான அணியினர்

மாகாண மட்டத்தில் டெனிஸ் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகி உள்ளனர். மேலும் இவ் அணியினர்  ஒக்ரோபர் மாத இறுதியில்  தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்ள இருப்பதால் நிரந்தர கொங்கிறீற் டெனிஸ் மைதானம் இருப்பின் சிறப்பான முறையில்  பயிற்சிகளை மேற்கொண்டு தேசிய மட்டதிலும் சாதனைகளை மேற்கொள்ள முடியும். எனவே மைதானத்தை விரைவாக அமைத்து தரும்படி பழைய மாணவர்களின் உதவிகளை நாடி நிற்கின்றோம். மைதானம் (கொங்கிறீட் தரை மட்டும்) அமைப்பதற்கான உத்தேச செலவு ரூபா 2700000  தேவைப்படுகிறது. 17  வயதுப் பிரிவு.....................   20 வயதுப்பிரிவு....................     உதவிகள் 1.ரூபா 90000 டெனிஸ் உபகரணங்கள் ..................... பழைய மாணவர் சங்கம் 2.  உரும்பிராய் பாடசாலைகள்  பழைய மாணவர் சங்கத்தின்(கனடா)...

Read More

டெனிஸ் மைதான ஆரம்பகட்ட வேலைகள் அன்பளிப்பு

மாணவர்கள் மாகாண, தேசிய  மட்டத்தில்  டெனிஸ் விளையாட்டை மேம்படுத்துவதற்காக திரு பாலச்சந்திரன் அவர்களால் டெனிஸ் மைதானத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் அண்ணளவாக  ரூபா 300 000 செலவில் நிர்மாணிக்கப்பட்டு அன்பளிப்பு செய்யப்பட்டது.  

Read More

மாநாட்டு மேசை அன்பளிப்பு

உரும்பிராய் பாடசாலைகள் பழைய மாணவர் சங்கத்தின் (கனடா) ஊடாக உரும்பிராய் மேம்பாட்டுக் கழகத்தினால்  ரூபா 105 000 பெறுமதியான மாநாட்டு மேசை அன்பளிப்பு செய்யப்பட்டது.  

Read More

பாடசாலையின் செயற்பாட்டு பதிவுகள்

காலை பிரார்தனை நிகழ்வின் போது..............   வலையமட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் 20 வயதுப்பிரிவு பெண்கள் அணியினர் முதலாம்மிடம் பெற்றனர்(2022) யாழ் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான வொலிபோல் போட்டியில் உரும்பிராய் இந்துக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர். இதன் இறுதியாட்டம் ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் உரும்பிராய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணி மோதியது. முதல் செற்றில் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணி வெற்றி பெற்ற போதிலும் அடுத்த இரண்டு செற்களிலும் தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய உரும்பிராய் இந்துக் கல்லூரி அணி 2:1 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக்...

Read More

மதிய உணவு வழங்கும் நிகழ்வு

திரு.பாலச்சந்திரன்(கனடா) அவர்களால்.மதிய உணவு வழங்கும் நிகழ்வு ஏப்பிரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இவரின் பங்களிப்பு ஆகஸ்ட் மாதம் நிறைவு பெறுவதாலும், எமது பாடசாலையில் அதிகளவான மாணவர்கள் வறியவர்களாக காணப்படுவதால் இத்திட்டத்தினை மேற்கொண்டு நடாத்துவதற்கு எமது பழைய மாணவர் சங்கங்கள் (கனடா,லண்டன்) மற்றும் பழைய மாணவர்களிடமும் உதவியை எதிர்பார்த்து நிற்கிறோம். ஆரம்ப நிகழ்வின் பதிவுகள்.................................          

Read More

பசும்பால் வழங்கும் திட்டம்

திரு.ரவி(கனடா) அவர்களால் பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் தி்ட்டம் அதிபர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வின் போது.............. [video width="640" height="352" mp4="https://urumpiraihinducollege.com/wp-content/uploads/2022/08/WhatsApp-Video-2022-08-15-at-1.43.06-PM.mp4"][/video]

Read More

பாடசாலை செயற்பாடுகள்

கவின்நிலைப்படுத்தலுக்கான  உதவிகள் பழைய மாணவர் சங்கம் கனடா                    - Rs 50 000 திரு. க. சோதிலிங்கம் (கனடா)                         - Rs 25 000 திரு .ஜெயமுகுந்தன் ஜெயரட்ணம்(கனடா)  -Rs 30 000 அமைய அடிப்படையில் சுத்திகரிப்பு  தொழிலாளி(மாதாந்தம் பழைய மாணவர் சங்கம் கனடா) - Rs25000 திரு.த.சுப்பிரமணியம்(லண்டன்)                      Rs 100 000 மாணவர் நலன் மேம்பாடு உதவிகள் திரு. பாலச்சந்திரன்(கனடா) அவர்களால் மதிய உணவு வழங்கப்படுகிறது. திரு. ரவி...

Read More