பரிசளிப்பு விழா -2023
யா/உரும்பிராய் இந்துக் கல்லூரியின் 2023 ஸ்தாபகர் தினமும் பரிசில் நாளும் நிகழ்வின் பதிவுகள்..............
யா/உரும்பிராய் இந்துக் கல்லூரியின் 2023 ஸ்தாபகர் தினமும் பரிசில் நாளும் நிகழ்வின் பதிவுகள்..............
உரும்பிராய் இந்துக் கல்லூரியின் 2023ஆம் வருட இல்ல மெய்வல்லுனர் போட்டி நிழல் பதிவுகள்........
பாடசாலை தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பாடசாலை முகப்புத்தகப் பக்கத்துடன் இணைந்திருங்கள் பாடசாலை முகப்புத்தகத்துடன் இணைய கீழே அழுத்துங்கள்
கனடாவில் வசிக்கும் கல்லுரியின் பழைய மாணவன் திரு.சிவகுமார் சீவரட்ணம் அவர்களால் தனது பெற்றோர்களான திரு.திருமதி சீவரட்ணம் சரஸ்வதி அவர்களின் ஞாபகார்த நிதியமாக ரூபா 3 000 000 கல்லுாரியின் பழைய மாணவர் சங்க சேமிப்பு கணக்கின் ஊடாக நிலையான வைப்பு கணக்கில் இடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டிப் பணம் கல்லுாரியில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் மற்றும் விளையாட்டுத்துறைகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கமையவும் நிலையான வைப்புக்கணக்கில் இடப்படும் பணம் எந்த சந்தர்பத்திலும் மீளப் பெற முடியாது என்ற நிபந்தனைக்கு அமையவும் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
2700000 ரூபா பெறுமதியான சீமெந்திலான ரெனிஸ் மைதானம் அமைப்பதற்கு ஆரம்ப கட்டட நிதிப் பங்களிப்பு வழங்கியோர் விபரம். 1) Sivakumar Seevaratnam (canada) ---------Rs 300000.00 2) Balachandran Tharmalingam (canada) ----Rs 300000.00 3) Prasanth Balachandran (canada) ----- Rs 150000.00 4) Thilakakumar (Germany) ---- Rs 100000.00 இவ் வேலைத்திட்டத்தை விரைவாக செய்து முடிக்க வேண்டியிருப்பதலால் நிதிப்பங்களிப்புகளை விரைவாக தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
திரு. பிரவீன் பாலச்சந்திரன் (கனடா) அவர்களால் பாடசாலை மாணவர்களின் மேசை வரிப்பந்து பயிற்சியை மேம்படுத்தும் முகமாக ROBO PONG TABLE TENNIS ROBOT மின்சார தானியங்கி இயந்திரமும் அதற்கான பந்துகளும் அன்பளிப்பு செய்யப்பட்டது.
திரு.இரத்தினம் சிதம்பரநாதன் (கனடா) அவர்களால் பாடசாலையில் பழச்செய்கை ஊக்கிவிக்கும் முகமாக இந்திய மாதுளங்கன்று(30) அன்பளிப்பு செய்யப்பட்டது.
திரு.இரத்தினம் சிதம்பரநாதன் (கனடா) அவர்களால் பாடசாலை மைதானத்தில் அமைந்துள்ள மல சல கூடம் மாணவர்களின் குடி நீர் பயன்பாடு மற்றும் மைதானத்தின் ஏனைய பயன்பாடுகளுக்காக நீர் விநியோக வசதியை ஏற்படுத்துவதற்காக குழாய் கிணறு மற்றும் தண்ணீர் தாங்கியொன்றும் அமைப்பதற்கான ஆரம்ப கட்டட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது.
திரு. இரத்தினம் சிதம்பரநாதன் (கனடா) அவர்களின் முயற்சியால் சங்கீதபாட கற்றல் கற்பித்தல் செயன்முறையை மேம்படுத்துவதற்காக பின்வரும் இசைக்கருவிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது. ஓர்கன் வயலின் மிருதங்கம் கார்மோனியம் உடுக்கு புல்லாங்குழல் தாளம் மின்சுருதிப்பெட்டி கெஞ்சிரா
திரு.இரத்தினம் சிதம்பரநாதன் (கனடா) அவர்களின் நிதியுதவியுடன் பாடசாலையின் நுாலகத்துக்கு வர்ணம் புசி கூரை திருத்தம் செய்து மற்றும் நுாலக தளபாடங்களும் திருத்தம் செய்ததுடன் தொடர்ந்து பொன் விழாக்கட்டட மேல் மாடிக்கு வர்ணம் புசி மற்றும் கூரை வேலை திருத்தம் செய்து பாடசாலையின் பெயர் எழுதப்பட்டது.