மேசைப்பந்தாட்டம் – மாகாண மட்டத்தில் சாம்பியன்
[caption id="attachment_992" align="alignnone" width="300"] மேசைப்பந்தாட்டம் - சாம்பியன்[/caption]
[caption id="attachment_992" align="alignnone" width="300"] மேசைப்பந்தாட்டம் - சாம்பியன்[/caption]
G.C.E (O/L) Results - 2022(2023) Kamiltan Siyanika 5A 4B Uthayakumaran Ashwini : 5A 2B 1C Uthayachanthiran Annesujeena : 4A 1B 3C 1S Partheepan Thanje : 4A 1B 2C 1S Jeyakiri Dilaxan : 3A 3B 2C 1S Thivakaran Mithusan : ...
மாகாண மட்டத்தில் நடைபெற்ற 16 வயது மகளிருக்கான Table Tennis போட்டியில் சாம்பியனான இவர்கள் தேசிய மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் பங்குபற்றினர்.இதற்கான அனுசரணையை கனடாவில் வசிக்கும் கல்லூரியின் பழைய மாணவர்களான திரு சிவக்குமார் சீவரட்ணம் மற்றும் திரு.பாலச்சந்திரன் தர்மலிங்கம் ஆகியோர் வழங்கினர்.இவர்களுக்கு எமது கல்லூரி சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாலச்சந்திரன்(கனடா), இரத்தனம் சிதம்பரநாதன்(கனடா) அவர்களின் முயற்சியினால் எமது பாடசாலையின் டெனிஸ் மைதானம் பழைய மாணவர்களின் பண உதவியினால் புனரமைக்கப்பட உள்ளது.அதன் முதற் கட்ட நிகழ்வாக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இரத்தினம் சிதம்பரநாதன்(கனடா) அவர்களினால் எமது பாடசாலை மைதானத்தில் தண்ணீர் தாங்கி திறந்து வைக்கப்பட்டது.(முழு நிதிப் பங்களிப்பு இரத்தினம் சிதம்பரநாதன்)
செல்வி சசிதரன் பரணிகா வயலின் இசை 1ம் இடம் செல்வி பரமேஸ்வரன் சாதனா தனிஇசை 2ம் இடம் இவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று(04/10/2023) பாடசாலையில் நடைபெற்றது.இந்த நேரத்தில் இசை கருவிகளை அன்பளிப்ச் செய்துள்ள இரத்தினம் சிதம்பரநாதன்(கனடா) அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.அத்துடன் இந்த போட்டிக்கான ஒழுங்குகளை மேற்கொண்ட அதிபர், பொறுப்பாசிரியர் மற்றும் மாணவர்களுக்கும் பாடசாலை சமுகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கல்லூரியின் தெற்குப் புறத்தில் உள்ள மதில் சரிந்து விழுந்தது தொடர்பாக மூன்று வாரத்திற்கு முன்பு கல்லூரியின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தோம்.மதிலை புனரமைப்பதற்கு பாடசாலையினது வெளிநாடுகளிலிருக்கும் பழைய மாணவர் சங்கங்கள்,பழைய மாணவர்கள், மற்றும் நலன்விரும்பிகள் எவரும் முன்வரவில்லை. மதிலை புனரமைத்து பாடசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் உங்களிடம் இருந்து உதவி கோரி நிற்கின்றோம்