கனடா பழையமாணவர்களின் நிதி அன்பளிப்பின் மூலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயிலும் அலங்கார வளைவும் இன்று (24.10.2012) பாடசாலை அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு.ச.ஏகாம்பரநாதன் J.P அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது. அதிபர்,ஆசிரியர்கள், பழையமாணவர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் கல்லூரிவாயிலில் திரண்டுநிற்க திரு.ச.ஏகாம்பரநாதன் அவர்கள் நாடவினை வெட்டி நுழைவாயிலினைத் திறந்துவைத்தார். கல்லூரியில் நடைபெற்ற வாணிவிழாவின் சிறப்புநிகழ்வாக நடைபெற்ற இவ்பைவத்தில் நுழைவாயிலையும் சரஸ்வதி சிலையையும் அமைத்துத்தந்த கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து பண அன்பளிப்பு வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து விஜயதசமி பூசையும் வித்தியாரம்பமும் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.
Read More