கல்லூரி முன்றலில் சரஸ்வதிசிலைஅங்குரார்ப்பணம்.

இலண்டன் பழையமாணவர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நிதி மூலம் கல்லூரி முன்றலில் அமைக்கப்பட்டசரஸ்வதிதேவியின் உருவச்சிலை கல்லூரி அதிபரினால் இன்று(23.10.2012) காலைஅங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. கல்லூரிபிரார்த்தனைமண்டபத்தில் நடைபெற்றசரஸ்வதிபூசையையடுத்து முன்னாள் அதிபர்,முன்னாள் உபஅதிபர் பழையமாணவர்கள்,ஆசிரியர்கள் மாணவர்கள் நலன்விரும்பிகள் சூழ்ந்துநிற்கசிலையினைஅதிபர் திரு.அ.அருணந்திசிவம் அவர்கள் அங்குரார்ப்பணம் செய்து மாலைஅணிவித்தார். சிலையைஅமைக்கநிதிவழங்கிய இலண்டன் பழையமாணவர்களுக்கும்; அதனையும் தடாகத்தினையும் வடிவமைத்தகலைஞர்களுக்கும்,மற்றும் அதற்குஉதவியஅனைவருக்கும் அதிபர் நன்றியினைத் தெரிவித்தோடுஅமைக்கப்பட்ட இச் சரஸ்வதிசிலையானது கல்லூரியின் அனைத்துமேம்பாட்டுக்கும் அருள்பாலித்து உதவும் எனவும் தெரிவித்தார். முன்னாள் அதிபர் தி.அ.ஈஸ்வரநாதன் அவர்கள் ஆசியுரைவழங்கினார்