கனடாவில் வசிக்கும் கல்லுரியின் பழைய மாணவன் திரு.சிவகுமார் சீவரட்ணம் அவர்களால் தனது பெற்றோர்களான திரு.திருமதி சீவரட்ணம் சரஸ்வதி அவர்களின் ஞாபகார்த நிதியமாக ரூபா 3 000 000 கல்லுாரியின் பழைய மாணவர் சங்க சேமிப்பு கணக்கின் ஊடாக நிலையான வைப்பு கணக்கில் இடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டிப் பணம் கல்லுாரியில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் மற்றும் விளையாட்டுத்துறைகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கமையவும் நிலையான வைப்புக்கணக்கில் இடப்படும் பணம் எந்த சந்தர்பத்திலும் மீளப் பெற முடியாது என்ற நிபந்தனைக்கு அமையவும் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.