கல்லுாரியின் நிறுவனர் தின விழாவும் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும்

கல்லுாரியின் நிறுவனர் தின விழாவும் புதிய இணையத்தளமான urupiraihinducollege.com  அங்குரார்ப்பண நிகழ்வும்  வருடாந்த பரிசளிப்பு விழாவும்  03.04.2022 கல்லுாரியில் இடம்பெற உள்ளது.

இந்நிகழ்வில் பின்வரும் நிகழ்வுகளும் இடம்பெற உள்ளது

  1. துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையம்  திறப்பு நிகழ்வு  – அன்பளிப்பு லண்டன் பழைய மாணவர் சங்கம்
  2. முன்னாள் விளையாட்டுத்துறை ஆசிரியர் அமரர் இரட்ணம் அவர் ஞாபகார்த்தமாக விளையாட்டு அலகில் ராதை பாஸ்கரன் அவர்களால் அன்றையதினம் திறன் வகுப்பறை கையளிப்பும் திறப்பு விழாவும் இடம்பெறுகின்றது.
  3. புதிய கணினி கையளிப்பு நிகழ்வு
  4. புதிய புகைப்பிரதிரதி இயந்திரம்   கையளிப்பு நிகழ்வு
  5. புதிய நீளம்பாய்தலுக்கான திடல் பாவனைக்கு கையளித்தல்
  6. புதிதாக உருவாக்கப்பட்ட மென்பந்து துடுப்பாட்ட திடல் கையளித்தல்

புதிய இணையத்தளம் ஊடாக உடனுக்குடன் தகவல்கள அனைவரும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.  இணையத்தளத்தில் மேலும் தரவுகளை இறறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வுககளில் பழைய மாணவர்கள் பெற்றோர்களை கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்