யா/உரும்பிராய் இந்துக்கல்லுாரி

1911ம் ஆண்டு சித்திரைத் திங்கள் மூன்றாம் நாள் இப்பாடசாலை மேற்குப் பக்கத்திலுள்ள கிணற்றின் அயலிலே அமைந்திருந்த ‘பொடியார்’; என்பவரின் புகையிலைக் கொட்டிலில் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. திருவாளர் சின்னையா என்பவர் ஆசிரியராக இருந்தார். வகுப்பு ஆரம்பிக்கப்பட்டபோது முதல் மாணவனாக வைத்தியகலாநிதி வல்லிபுரம் அவர்களின் தம்பியான சிதம்பரப்பிள்ளையின் மகன் விசுவலிங்கமே சேர்த்துக் கொள்ளப்பட்டார். (விசுவலிங்கம் என்பவர் எமது கல்லூரியின் இன்றைய பழையமாணவர் சங்க செயலாளர் திரு.சோமநாதன் அவர்களின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.) இவ் வகுப்புக்களின் பின் உரும்பிராய் அன்னை பெற்றெடுத்த ஐந்து லிங்கங்கள் பிறந்த வீடான பஞ்சலிங்கம் மனையாகிய செல்லப்பா மீனாட்சிப்பிள்ளை ஆகியோரின் வீட்டு விறாந்தைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இங்கும் சில காலமே வகுப்புக்கள் நடைபெற்றது. பின்னர் திரு.சின்னத்தம்பர் வேலுப்பிள்ளை அல்லது திரு.ஐயம்பிள்ளை என்பவரிடம் 10பரப்பு நிலம் இலவசமாகப் பெறப்பட்டு அங்கு கொட்டில் அமைத்து ஸ்தாபிக்கப்பட்டது. More